தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வழங்க கோரி 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர்.
400-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், கடந்த 3 மாதங்களாக 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கி விட்டு இந்த மாதம் 12 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.