குறைந்தது 3 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்கள் மற்றும் அனைத்து இணைத்துறை அலுவலர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.