திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கணவர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.
தும்பேரி ஊராட்சி மிட்னாங்குப்பத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மதன்குமார், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வெண்ணிலாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இத்தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
பெங்களூரில் வேலை செய்து வரும் மதன்குமார், வீட்டு செலவுக்கு பணம் தராமல் ஆன்லைன் ரம்மியிலேயே அழித்து வந்ததால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், மீண்டும் தகராறு ஏற்படவே, மனமுடைந்த வெண்ணிலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.