5 
மாவட்ட செய்திகள்

கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக் மீது மோதல்... பைக்கில் சென்ற தம்பதி தூக்கி வீசப்பட்டு படுகாயம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த பைக் மீது மோதியதில், கணவன் - மனைவி தூக்கி வீசப்பட்டதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Srini Vasan

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த பைக் மீது மோதியதில், கணவன் - மனைவி தூக்கி வீசப்பட்டதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த கர்ணன் என்பவர், தனது இகோ காரில் கருங்கல் நோக்கி சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையின் வலதுபுறமாக சென்ற கார், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் - மனைவி மீது மோதியது. அதில், தம்பதியர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர்.