தொடர் விடுமுறை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள், இயற்கை அழகை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக சுற்றுலா தளங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கூட்டம் அதிகரித்து இருந்தது.