DGL Palani samy 
மாவட்ட செய்திகள்

சபரிமலை சீசன் துவங்கியதால் பழனியில் கூட்டம்

யானை பாதை, மின் இழுவை ரயிலில் என அனைத்து பகுதியிலும் கூட்டம் காணப்பட்டது.

Web Team

சபரிமலை சீசனை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பக்தர்கள் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்று வரும் பக்தர்கள், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததற்காக வருகை தந்தனர். படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயிலில் என அனைத்து பகுதியிலும் கூட்டம் காணப்பட்டது.