கடலூர்

நிலத்திற்காக, அக்காவை கொ*ற தங்கை குடும்பம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நிலத்தகராறில் பெண் கொடூரமாக கொ* செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிலத்திற்காக சொந்த அக்காவையே மகன்களை ஏவி விட்டு கொ* செய்த கொடூர மனம் படைத்த தங்கையை போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.

Azhagiri Arumugam

விவசாய நிலத்திற்காக...

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. கணவனை இழந்த லட்சுமிக்கு நான்கு மகள்கள், ஒரு மகன் இருக்கும் நிலையில், விவசாயத்தை நம்பி தான் பிழைப்பு நடத்தி வந்தார்.

மாமனார் கிரயமாக எழுதிக் கொடுத்த நிலத்தில் லட்சுமி விவசாயம் செய்து வர, அந்த நிலத்தை பார்த்து அவரது தங்கை வேம்புவுக்கு கண்ணை உறுத்தியிருக்கிறது.

இதனாலேயே அக்கா - தங்கை இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்திருக்கிறது. வேம்புவுக்கு 4 மகன்கள் இருக்கும் நிலையில், மகன்களை ஏவி விட்டு அக்கா குடும்பத்திடம் வம்பிழுத்து வருவதையே முழு நேர வேலையாக செய்து வந்திருக்கிறார்.

குறுக்கே புகுந்த தாய்க்கு...

இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேம்புவின் நான்கு மகன்களும் சேர்ந்து லட்சுமியின் பம்புசெட் மோட்டாரில் கல்லை போட்டு பழுது ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை லட்சுமியும், அவரது மகன் சந்தோஷ்குமாரும் தட்டிக் கேட்ட மீண்டும் அடிதடி தகராறு உருவாகியிருக்கிறது.

வேம்புவின் நான்கு மகன்களும் சேர்ந்து சந்தோஷ்குமாரை இரும்பு ராடை கொண்டு தாக்க முயற்சிக்கவே, குறுக்கே புகுந்து தாய் லட்சுமி தடுக்க முயன்றிருக்கிறார். ஆனாலும், நில வெறி பிடித்த வேம்புவின் மகன்கள் லட்சுமியை இரும்பு ராடை வைத்து பலமாக தாக்கிய நிலையில், அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

சுருண்டு கீழே விழுந்த லட்சுமியை கவனிக்க கூட முடியாத அளவுக்கு சண்டை காட்சிகள் அரங்கேற, மனசாட்சி இல்லாமல் லட்சுமியை ஏறி மிதித்து விட்டு திமிறிக் கொண்டு அடிதடிக்கு சென்றார். சுற்றி வேடிக்கை பார்த்தவர்கள் கூட லட்சுமியை கவனிக்காத நிலையில், கடைசியாக மகன் சந்தோஷ்குமார் பார்த்து விட்டு பதறி தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.

உயிரிழப்பு... தேடுதல் வேட்டை...

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் சேர்ந்து காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு லட்சுமியை கொண்டு சென்றனர். அங்கிருந்து சிதம்பரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட லட்சுமி, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார்.

மகனை தாக்கி விடுவார்களோ என பயந்து குறுக்கே புகுந்து உயிரையே விட்டிருக்கிறார் தாய் லட்சுமி. இந்த சம்பவம் குறித்து கொ* வழக்கு பதிவு செய்த போலீசார், வேம்புவின் மகன்கள் மூன்று பேரை கைது செய்த நிலையில், மற்றொரு மகனையும், கொ*க்கு மூலக் காரணமாக இருந்த வேம்புவையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீடியோவில் காணலாம்