Thoothukudi 
மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி மையத்தில் கெட்டுப்போன முட்டை விநியோகம்... குழந்தைக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதாக முறையிட்ட தாய்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில், தனது குழந்தைக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதாக முறையிட்ட தாயிடம், அரசு வழங்கும் முட்டை அப்படித் தான் இருக்கும் என அங்கன்வாடி பணியாளர் அலட்சியமாக பதிலளித்த ஆடியோ வெளியாகியுள்ளது.

Web Team

லட்சுமி என்ற பெண் தனது ஒன்றரை வயது குழந்தைக்கு வழங்கப்பட்ட மூன்று முட்டைகளை தண்ணீரில் போட்டு பார்த்த போது, அவை கெட்டுப் போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து அங்கன்வாடி பணியாளர் ரோஸில்டாவை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, வேண்டுமானால் சி.எம்.மிடம் புகார் கொடுத்துக் கொள்ளுமாறு அலட்சியமாக கூறியுள்ளார்.