paddy 
மாவட்ட செய்திகள்

மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகள்

நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகள் கவலை

Web Team

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள சித்தாலங்குடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்த கொள்முதல் நிலையத்தில் போதிய இடம் வசதி இல்லாததால் விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை தார்ப்பாய்கள் கொண்டு மூடியுள்ளனர். இந்நிலையில், நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள், இடைத்தரகர்கள் மூட்டைக்கு 55 முதல் 60 ரூபாய் அதிகாரிகள் கேட்பதாக குற்றம் சாட்டும் விவாசயிகள், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக வேதனை தெரிவித்தனர்.