TVL Kallacharayam 
மாவட்ட செய்திகள்

கல்குவாரி பகுதியில் இரவு பகலாக மது விற்பனை

காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்த மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Web Team

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே இரவு பகலாக மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்யும் ட்ரோன் காட்சி வெளியாகியது. எல்லம்பள்ளி கிராமத்தில் கல்குவாரி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்கப்படுவதாகவும், மதுப்பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வாங்கி அங்கேயே வைத்துக் குடித்து அட்டகாசத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்த மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.