சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபையில் தீட்சிதர்கள் எடுத்த நடவடிக்கையால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தீட்சிதர்கள் தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.