Vandalur 
மாவட்ட செய்திகள்

வண்டலூரில் கனரக வாகனங்களில் இருந்து டீசல் திருட்டு... போலீசாருக்கு பணம் கொடுப்பதாக கூறும் வீடியோ

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ரயில் நிலையம் அருகே பழைய பொருட்கள் வாங்கும் கடைக்கு அருகில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களில் இருந்து டீசலை திருடி,

Web Team

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ரயில் நிலையம் அருகே பழைய பொருட்கள் வாங்கும் கடைக்கு அருகில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களில் இருந்து டீசலை திருடி,

அந்த கடை உரிமையாளர் குறைந்த விலைக்கு விற்பதாக கூறப்படும் நிலையில், போலீசாருக்கு பணம் கொடுத்து விட்டே இதனை செய்வதாக அவர் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.


அந்த கடையில் 25 லிட்டர் தண்ணீர் கேன்களில் டீசல் நிரப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், எல்லோருக்கும் கமிஷன் போவதாக தெரிவித்த அந்த நபர்,

போலீசார் எங்களை மிரட்டினாலும் அவர்களும் நாங்களும் எல்லாம் ஒன்றுதான் புரியுதா என்று கேட்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.