8 
மாவட்ட செய்திகள்

திருப்பதி லட்டுக்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம்.. திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் உரிமம் நிறுத்தி வைப்பு

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

Srini Vasan

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஏ ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உரிமத்தை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது.

மேலும் நெய் உற்பத்திக்கான உரிமத்தை மட்டும் நிறுத்தி வைப்பதா, அல்லது அனைத்து பால் பொருட்களுக்குமான உரிமத்தை நிறுத்தி வைப்பதா என்று உரிமம் வழங்கும் அதிகாரி பரிசீலிக்க வேண்டும் என்ற நீதிபதி, அனைத்து பால் பொருட்களையும் நிரந்தரமாக தடை செய்ய விரும்பினால் சட்டத்திற்கு உட்பட்டு உரிமத்தை ரத்து செய்யலாம் எனவும் உத்தரவிட்டார்.