SLM DMK Murder 
மாவட்ட செய்திகள்

திமுக கிளைச்செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

ராஜேந்திரன் என்பவருக்கும் அவரது பங்காளி ராஜமாணிக்கம் என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது.

Web Team

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே திமுக கிளைச்செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீழ்நாடு பகுதியை சேர்ந்த திமுக கிளைச்செயலாளரான ராஜேந்திரன் என்பவருக்கும் அவரது பங்காளி ராஜமாணிக்கம் என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கில் ராஜேந்திரனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், ராஜமாணிக்கம் உள்ளிட்ட நான்கு பேர் இணைந்து ராஜேந்திரனை சுட்டுக் கொன்றது தெரியவந்துள்ளது.