Theni 
மாவட்ட செய்திகள்

திமுக எம்.எல்.ஏ. மகாராஜன் - எம்பி தங்க தமிழ்செல்வன் இடையே மோதல்... நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் மோதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வன் மற்றும் ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ. மகாராஜன் இருவரும் மேடையிலேயே மோதிக் கொண்டது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Web Team

நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் தமது படம் இடம் பெற வில்லை என்பதால் ஆத்திரமடைந்த எம்பி தங்க தமிழ்செல்வன், மகாராஜனை மேடையிலேயே திட்டினார்.

அதோடு, நலத்திட்ட உதவிக்கான அட்டையை யார் வழங்குவது என்பதிலும் ஈகோ மோதல் ஏற்பட இருவரும் ஆட்சியர் முன்னிலையிலேயே நலத்திட்ட அடையாள அட்டைகளை மாறி மாறி பறித்துக் கொண்டனர்.