குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணனின் 50-வது ஆண்டு நினைவு தினம் அவருடைய சொந்த ஊரில் அனுசரிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன்.
திருத்தணியில் உள்ள பள்ளியில் பயின்று ஆசிரியராக வாழ்க்கை தொடங்கிய ராதாகிருஷ்ணன், இந்திய குடியரசு தலைவராக பதவி வகித்தார்.
அவருடைய 50-வது ஆண்டு நினைவு தினம் சொந்த ஊரான வெங்கடாபுரத்தில் அனுசரிக்கப்பட்ட நிலையில், அந்த கிராமத்தில் ராதாகிருஷ்ணனுக்கு மணிமண்டபம், திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.