SLM Yercade 
மாவட்ட செய்திகள்

பெரியாரின் பெயர் மீது கருப்பு பெயிண்ட் அடித்த நாதகவினர்

தந்தை பெரியார் என்ற பெயரின் மீது கருப்பு பெயிண்ட் அடித்து தகடூர் அதியமான் என்ற பெயரைக் கொண்ட போஸ்டரை அதன் மேல் ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Web Team

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கொண்டை ஊசி வளைவில் இருந்த பெரியாரின் பெயர் மீது நாதகவினர் கருப்பு பெயிண்ட் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பண்டையகால மன்னர்களின் புகழைப் போற்றும் விதமாக 8ஆவது கொண்டை ஊசி வளைவில் இருந்த தகடூர் அதியமான் என்ற பெயரை கடந்த கோடை விழா புதுப்பிப்பு பணியின் போது, பெரியார் வளைவு என குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த நாதகவினர் தந்தை பெரியார் என்ற பெயரின் மீது கருப்பு பெயிண்ட் அடித்து தகடூர் அதியமான் என்ற பெயரைக் கொண்ட போஸ்டரை அதன் மேல் ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.