சிவகங்கை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள், உரிய பாதுகாப்பு உபரணங்கள் இல்லாமல் குப்பை அள்ளும் பணியில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. மழையால் நனைந்துள்ள குப்பைகளை வெறும் கைகளால் அள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பாக பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.