Thiruvarur 
மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த மின்சார இருசக்கர வாகனம்... 4 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இ-பைக் தீக்கிரை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மின்சார இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பிடித்து எரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Web Team

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மின்சார இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பிடித்து எரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மன்னார்குடி சாந்தி தியேட்டர் எதிரே செல்போன் கடை நடத்தி வரும் தங்கமணி என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக கோமாக்கி நிறுவன இ-பைக்கை பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் கடை வாசலில் நின்ற இ-பைக்கை ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதமானது.