குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தோட்டத்தில் புகுந்த யானைக் கூட்டம் மூன்று ஏக்கர் வாழை மற்றும் தென்னைப் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைக் கூட்டம், தெள்ளந்தி அடுத்த உடையார் கோணத்தில் சுமார் மூன்று ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் தென்னை தோட்டத்திற்குள் புகுந்தது.
வாழைக் கன்றுகளை சாப்பிட்டும், தென்னை மரங்களை கால்களால் மிதித்து அழித்தும் சேதப்படுத்தியதாக கவலை தெரிவித்த விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.