9 
மாவட்ட செய்திகள்

உணவு தேடி மீண்டும் ஊருக்குள் வலம் வந்த வேட்டையன் யானை.. வேட்டையன் யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி மக்கள் பீதி

கோவை தடாகம் பகுதியில் காட்டு யானை வேட்டையன், மீண்டும் உணவு தேடி வீதியில் வலம் வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Srini Vasan

கோவை தடாகம் பகுதியில் காட்டு யானை வேட்டையன், மீண்டும் உணவு தேடி வீதியில் வலம் வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

தடாகம், பன்னிமடை, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்த வேட்டையன், 2 பேரை தாக்கிக் கொன்றதால் அதனை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கும்கி யானைகளை வரவழைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவே, சில நாட்களாக ஊருக்குள் வராமல் இருந்தது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தடாகம் - துடியலூர் சாலையில் வரப்பாளையம் பிரிவு பகுதியில், வேட்டையன் யானை உணவு தேடி ஆக்ரோஷமாக வலம் வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.