Tut paddy 
மாவட்ட செய்திகள்

நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதாக விவசாயிகள் கவலை

Web Team

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தென் திருப்பேரையில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் உள்ள தற்காலிக திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறும் விவசாயிகள், குருகாட்டூர் அல்லது தென் திருப்பேரையில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.