ஈரோட்டில், உரிய ஆவணமின்றி கொண்டு சென்றதாக ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
டெம்போ ட்ராவலர் வாகனத்தை தேர்தல் படை சோதனை செய்த போது, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், 40 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே ஆவணங்கள் இருந்த நிலையில், ஆவணமின்றி இருந்த ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.