CDL Pension 
மாவட்ட செய்திகள்

கடலூர் அருகே உயிருடன் உள்ள மூதாட்டி இறந்ததாக தவறான தகவல்

பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அக்கம்பக்கத்தினர் தரும் உணவை உண்டு வாழும் நிலை உள்ளது.

Web Team

காட்டுமன்னார்கோவில் அருகே உயிரோடு இருக்கும் 80 வயது மூதாட்டி இறந்து விட்டதாக தவறான தகவல் அளிக்கப்பட்டதால், முதியோர் உதவித் தொகை பெற முடியாமல் அவர் அவதிக்குள்ளாகியுள்ளார். குமாராட்சி கிராமத்தில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வரும் ராஜாமணியம்மாள் கடந்த 40 ஆண்டுகளாக முதியோர் உதவித் தொகை பெற்று வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இறந்து விட்டதாக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றவர்களின் உதவியுடன் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அக்கம்பக்கத்தினர் தரும் உணவை உண்டு ராஜாமணியம்மாள் வாழும் நிலை உள்ளது.