திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் எடை போட மறுப்பதை கண்டித்து விவசாயிகள் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத்தில் வியாபாரிகள் பங்கு கொள்ள மறுப்பதால், விவசாயிகள் நெல் கொண்டு வரவேண்டாம் என கூறுவதாகவும்,
ஏற்கனவே கொண்டு வந்த நெல் மூட்டைகளை எடை போட மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ள நிலையில் ,விலை குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது E-NAM செயலி திட்டத்தை அரசு கைவிட வேண்டுகோள் விடுத்தனர்.