கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள்,
மேட்டூர் அணை திறந்து 2 மாதங்கள் ஆகியும் கடை மடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.