nagai 
மாவட்ட செய்திகள்

குளம் போல் மாறிய வயல்வெளிகள்

கனமழையால் சம்பா, தாளடி இளம்பயிர்கள் பாதிப்பு - வயல்வெளிகள் குளம் போல் காட்சியளிப்பதால் விவசாயிகள் கவலை.

Web Team

நாகை மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் 56 சென்டிமீட்டர் மழை பதிவானது. விடிய விடிய பெய்த கனமழை பகலிலும் தொடர்வதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி விவசாயத்தை நேரடி மற்றும் நடவுமுறையில் மேற்கொண்டனர். இதனிடையே நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நாகை, நாகூர், பாலையூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் இளம் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
குறிப்பாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் வடியாமல் இருப்பதால் இளம் பயிர்கள் நீரில் மிதப்பதுடன், அழுகும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.