4 
மாவட்ட செய்திகள்

முன்னாள் காவலர் சீருடையில் பணம் வசூலித்தாக புகார்... பணி நீக்கம் செய்யப்பட்ட காவலரை கைது செய்து விசாரணை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே முன்னாள் காவலர் ஒருவர் சீருடையில் வாகனங்களை சோதனை செய்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியது.

Srini Vasan

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே முன்னாள் காவலர் ஒருவர் சீருடையில் வாகனங்களை சோதனை செய்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியது.

செங்கண்டி புதூர் சாலையில் காவலர் போன்று நின்றிருந்த நபர் ஒருவர், அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து ஓட்டுநர்களை மிரட்டி பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அந்த நபரை கைது செய்தனர்.

விசாரணையில், ஏற்கனவே பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.