Sivagangai 
மாவட்ட செய்திகள்

சொத்துக்காக முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்... மனைவியே மருமகனை வைத்து தாக்கியதாக புகார்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சொத்துக்காக முன்னாள் ராணுவ வீரரை அவரது மனைவியே மருமகனை வைத்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

Web Team

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சொத்துக்காக முன்னாள் ராணுவ வீரரை அவரது மனைவியே மருமகனை வைத்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

காசியா பிள்ளை நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் நஜீர் ராஜா, தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில்,

அவரது வீட்டை அபகரிக்கும் நோக்கில் அவரது மருமகன் அசார் திட்டமிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு விசாரணையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாக புகார் அளித்தார்.

இந்நிலையில், அவரது மனைவி மும்தாஜ் மகள் மற்றும் மருமகனுடன் வந்து நஜுரை தாக்கிய நிலையில் அவர் இரத்தக் கரையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.