உலக இதய தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் சென்னையில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை இதய சிகிச்சைப்பிரிவு தலைவர் மருத்துவர் கண்ணன் தலைமையில், Cardiology soceity of india அமைப்பின் தலைவர் டி.ஆர்.முரளிதரன், செயலாளர் பிரதீப்குமார், பொருளாளர் நாகேஸ்வரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 160-க்கும் மேற்பட்டோர்க்கு ரத்தமாதிரி, ECG, BP பரிசோதனைகளை செய்து ஆலோசனைகளை வழங்கினர்.
அதில் பெஃப்சி தலைவர் R.K.செல்வமணி, இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.