Krishnagiri 
மாவட்ட செய்திகள்

குந்தாரப்பள்ளி வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்... பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வார சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியதால் ஆடு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Web Team

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வார சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியதால் ஆடு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் 5000-த்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன.

ஒரு கிடா ஆடு 15 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், சுமார் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றதாகவும் வியாரிகள் தெரிவித்தனர்.