Thanjai 
மாவட்ட செய்திகள்

பெரிய கோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்

இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Manigandan Raja

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு 7ஆம் நாளான இன்று சரஸ்வதி அலங்காரம், பக்தர்கள் சுவாமி
தரிசனம்.


தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீ பெருவுடையார் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும், இக்கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு 7 ஆம் நாளான இன்று சரஸ்வதி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகா தீபாரதனை கட்டப்பட்டது, இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.