KNC Sudukadu protest 
மாவட்ட செய்திகள்

முன்னறிவிப்பின்றி இடித்து அகற்றப்பட்ட கல்லறைகள் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயக்கொளத்தூர் பகுதியில் சாலைப் பணிக்காக முன்னறிவிப்பின்றி கல்லறைகள் அகற்றப்பட்டதால், அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயக்கொளத்தூர் பகுதியில் சாலைப் பணிக்காக முன்னறிவிப்பின்றி கல்லறைகள் அகற்றப்பட்டதால், அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆய கொளத்தூர் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே எண்ணூர்-மகாபலிபுரம் சாலை அமையவுள்ள நிலையில், சுடுகாட்டிற்கு மாற்று இடம் மற்றும் இழப்பீடு தருவதாக அறிவித்துவிட்டு திடீரென கல்லறைகளை இடித்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில் இடிந்த மகனின் கல்லறையை கண்டு தாய் ஒருவர் கதறி அழும் காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.