டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் ஓலைகுடா கிராமத்திற்கு செல்லும் சாலை, கடல் கொந்தளிப்பு மற்றும் மண் அரிப்பு காரணமாக சேதமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மீனவ மக்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. ஓலைகுடா செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.