கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சின்னசேலம், தியாகதுருகம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக, பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீரென அதிக அளவில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது.
இதனைதொடர்ந்து, அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.