Kothagiri rain news 
மாவட்ட செய்திகள்

கடும் பனி மூட்டத்துடன் பெய்து வரும் சாரல் மழை

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி சென்றனர்.

Web Team

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடும் பனிமூட்டத்துடன் பெய்து வரும் சாரல் மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கட்டபெட்டு, ஓரசோலை, பாண்டியன் பார்க், கோடநாடு மற்றும் கோத்தகிரியில் இருந்து உதகை, குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகளில் கடும் பனியுடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி சென்றனர்.