கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மலையோர கிராமங்களில், ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கீரிப்பாறை, காளிகேசம், கரும்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாகவே கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ரப்பர் பால் வெட்டும் தொழில் முடங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில், அவர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.