9 
மாவட்ட செய்திகள்

வாடகை கார் ஓட்டுநரை கத்தியால் குத்தி கார் கடத்தல்.. காரை கடத்தி சென்ற கல்லூரி மாணவன் கைது

கோவை மாவட்டம் காரமடை அருகே ஓட்டுநரை கத்தியால் தாக்கிவிட்டு வாடகைக் காரை கடத்தி சென்ற கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர். போத்தனூர் பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் சரவணம்பட்டியில் வாடகைக்கு செல்வதற்காக தனது காரில் காத்திருந்துள்ளார். அப்போது, அங்கு சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் அறிவழகனின் காரை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார். இந்த நிலையில், மருதூர் அருகே சென்ற போது, ஓட்டுநர் அறிவழகனை கத்தியால் குத்தி அவரை விரட்டிவிட்டு, அவரது காரை அந்த மாணவர் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

Srini Vasan

கோவை மாவட்டம் காரமடை அருகே ஓட்டுநரை கத்தியால் தாக்கிவிட்டு வாடகைக் காரை கடத்தி சென்ற கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

போத்தனூர் பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் சரவணம்பட்டியில் வாடகைக்கு செல்வதற்காக தனது காரில் காத்திருந்துள்ளார்.

அப்போது, அங்கு சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் அறிவழகனின் காரை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், மருதூர் அருகே சென்ற போது, ஓட்டுநர் அறிவழகனை கத்தியால் குத்தி அவரை விரட்டிவிட்டு, அவரது காரை அந்த மாணவர் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில், காரை கடத்தி சென்ற மாணவரை பத்து மணி நேரத்தில் போலீஸார் கைது செய்து காரை மீட்டனர்.