சிவகங்கை அருகில் கீழக்குளம் காட்டுப்பகுதியில் ஒன்றுகூடி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்ளிட்டோரை, போலீசார் ட்ரோன் கேமரா மூலம் இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்தனர். காட்டுப் பகுதியில் குற்றவாளிகள் ஒன்றுகூடி , குற்றசம்பவங்களுக்கு சதி திட்டம் தீட்டுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, சிறப்பு தனிப்படை அமைத்து கண்காணித்ததில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை ஆயுதங்களுடன் கைது செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.