37 
மாவட்ட செய்திகள்

சென்னையில் 5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்.. காவல் ஆணையர் போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவு

சென்னையில் ஐந்து வகையான விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் விதித்தால் போதுமானது என்று காவல் ஆணையர் போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Srini Vasan

சென்னையில் ஐந்து வகையான விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் விதித்தால் போதுமானது என்று காவல் ஆணையர் போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சமீப காலமாக போக்குவரத்து போலீசார் கும்பலாக நின்று துரத்தி பிடிப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தல் ஆகியவற்றிற்கு மட்டுமே அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற விதிமீறல்களுக்கு சிசிடிவி கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கும் பணி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.