தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் பெய்த மழையால் பல ஏக்கரிலான வாழை மற்றும் வெற்றிலை சேதமடைந்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தென்கால் பாசனம் பாயும் ஆத்திரங்கால், சேதுவாய்க்கால் உள்ளிட்ட 23 பாசன மடைகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழைக்கு சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
தற்போது வரை இந்த மடைகள் சரி செய்யப்படவில்லை என கூறப்படும் நிலையில், இரவு ஒரு மணி நேரம் பெய்த மழைக்கு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.