தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாயமானதாக கூறப்பட்ட நிலையில், உடல் அங்கேயே இருந்தது உறுதி செய்யப்பட்டது. அரசரடி கிராமத்தை சேர்ந்த தங்கராசு - மேகலா தம்பதியின் 10 வயது மகள் தர்ஷிகா உயிரிழந்த நிலையில், புதன்கிழமை மண்ணியாறு இடுகாட்டில் புதைத்தனர். காலையில் சடங்கு செய்ய சென்றபோது, சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் 3 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த இடத்தை அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் தோண்டி பார்த்தபோது, உடல் அங்கேயே இருந்ததால் மீண்டும் மண் போட்டு மூடப்பட்டது.