குஜராத் துறைமுகத்தில் மத்திய அரசின் சரியான கண்காணிப்பு இல்லாததால், அங்கு போதைப்பொருட்கள் புழக்கம் அதிக அளவில் உள்ளதாக, அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டினத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக போலீஸாரின் தீவிர கண்காணிப்பின் காரணமாக போதை பொருட்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.