30 
மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. 8,000 கன அடியிலிருந்து 14,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Srini Vasan

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், மெயின் அருவி, சினி அருவியில் உள்ளிட்டவற்றில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் கோடை விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.