Ramanathapuram 
மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகளில் நோட்டு, புத்தகம் வழங்கவில்லை என தகவல்... நோட்டு, புத்தகம் இல்லாமல் வகுப்புகள் தொடங்கப்படவில்லை என புகார்

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்படாததால், தற்போது வரை வகுப்புகள் துவங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்படாததால், தற்போது வரை வகுப்புகள் துவங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின், தமிழகம் முழுவதும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்களும், ஆசிரியர்களுக்கு கை நகலும் முழுமையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டபோது, விரைவில் நோட்டு, புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.