சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கிராம உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு வந்த நபர்கள் சைக்கிளை ஓட்டிக்காண்பித்த நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.பெருச்சிகோவில், துவார், தென்மாப்பட்டு, வாணியங்காடு, கீழபட்டமங்கலம், கள்ளிப்பட்டு, செவரக்கோட்டை, கருப்பூர், இரணசிங்கபுரம் ஆகிய 9 கிராமங்களில் காலியாக உள்ள தலையாரி பணிக்கு வட்டாட்சியர் மாணிக்கவாசகம் தேர்வு நடத்தினார்.