6 
மாவட்ட செய்திகள்

உரிய அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.. 30-க்கும் மேற்பட்ட காளைகள், இளைஞர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உரிய அனுமதி இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Srini Vasan

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உரிய அனுமதி இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகமலை அடிவாரத்தில் நடைபெற்ற போட்டியில் 30-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்ட நிலையில், மேலக்கால், சோழவந்தான், கொடிமங்கலம், குருவித்துறை, தாராபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் சில இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டது.