ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை அரை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஜெர்மனி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நடப்பு சாம்பியனான ஜெர்மனி 5க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 10ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.