16 
மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து மோதி சட்டக் கல்லூரி மாணவி உயிரிழப்பு.. கல்லூரி செல்வதற்காக டூவீலரில் சென்றபோது விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே தனியார் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சட்டக் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே தனியார் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சட்டக் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

முள்ளிகொளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் நிஷாந்தி குரோம்பேட்டையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில், கல்லூரிக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே குறுகிய வளைவில் திரும்பியபோது, எதிரே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது.

ஆபத்தான இந்த வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என புகார் எழுந்துள்ளது.