vpm 
மாவட்ட செய்திகள்

விழுப்புரம் சாலையாம்பாளையத்தில் சிறுத்தை நடமாட்டம்

சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து ட்ரோன் மூலம் கண்காணிப்பு

Web Team

விழுப்புரம் அருகே சாலையாம்பாளையம் ஏரிப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை பிடிக்க கூண்டு வைத்துள்ள வனத்துறையினர், ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
சிறுத்தை எப்போது ஊருக்குள் வருமோ என்ற அச்சத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், இரவு நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியே வராமல் இருக்கின்றனர். ஏரி அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு கூட பயத்துடன் செல்வதால், சிறுத்தையை விரைவில் பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.